டெல்லி: சர்வதேச விமான போக்குவரத்துக்கு மீது விதிக்கப்பட்டிருத்த தடை நீக்கியுள்ள மத்தியஅரசு வெளிநாடு பயணிகள் இந்தியா வர அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த பிப்ரவரி மாதம் முதல் விமான போக்குவரத்தில் பல்வேறு தடைகள் கொண்டு வரப்பட்டது. பின்னர் மார்ச் மாதம் இறுதியில், அனைத்து சர்வ தேச விமான போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது.
தற்கொரோனா தொற்று பொதுமுடக்கத்தில் 90 சதவிகித தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், கொரோனா காலகட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட அனைத்து விசாக்களின் காலாவதியும் எட்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் செல்லுபடியானவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஓஐசி கார்டு வைத்திருக்கும் வெளிநாட்டு இந்தியர்கள், வெளிநாட்டினர் என அனைவரும் இந்தியாவுக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் எலக்ட்ரானிக் விசா, சுற்றுலா விசா மற்றும் மருத்துவ விசாக்கள் மீதான தடை நீடிக்கும் என்று தெரிவித்து உள்ளது.
சர்வதேச விமானப் போக்குவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் நோக்கத்துடன், பெரும்பாலான விசாக்கள் மீது விதிக்கப்பட்டிருத்த தடையை நீக்கியிருப்பதாக மத்திய விமானப்போக்குவரத்துத் துறை தெரிவித்து உள்ளது.
வெளிநாட்டவர்கள் இந்தியா வர அனுமதி அளித்துள்ளது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய வம்சாவழியினர் மற்றும் இந்திய குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்கு வரலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
சுற்றுலா, எலக்ட்ரானிக், மருத்துவம் தவிர மற்ற விசாக்கள் மூலம் இந்தியா வர அனுமதி வழங்கப்படுவதாகவும் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வர விரும்பும் வெளிநாட்டினர் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.