கொல்கத்தா

கா அஷ்டமி என அழைக்கப்படும் துர்காஷ்டமி மற்றும் துரகாஷ்டமி   கொண்டாடப்படும் தேதி பற்றிய விவரம் இதோ

நாடெங்கும் கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழா ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகிறது.   மகிஷாசுரன் என்னும் அரக்கனைத் துர்க்கை அம்மன் வதம் செய்ததை நவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது.  துர்க்கை அம்மன் தனது பரிவாரங்களான சந்தா, முண்டா மற்றும் ரக்தபீஜா ஆகியோருடன் வதம் செய்ததாக மேற்கு வங்கத்தில் கொண்டாடப்படுகிறது.

இந்த நவராத்திரிகளில் அஷ்டமி திதி இங்கு முக்கியமான தினமாகக் கொண்டாடப்படுகிறது.  அஷ்டமி என்றால் எட்டாவது என பொருளாகும்.  அதன்படி நவராத்திரி தொடங்கி எட்டாம் தினம் மகா அஷ்டமி எனவும் துர்காஷ்டமி எனவும் கொண்டாடப்படுகிறது.   துர்க்கை அம்மன் தனது முழு சக்தியுட்ன் இந்த தினத்தில் தோன்றியதால் இது துர்காஷ்டமி எனக் கொண்டாடப்படுகிறது.

இந்த வருட துர்காஷ்டமி வரும் 24 ஆம் தேதி சனிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.  மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை சஷ்டி அதாவது நவராத்திரியின் ஆறாம் நாளில் இருந்து தொடங்குகிறது.  துர்காஷ்டமி அன்று அஷ்டமி திதியின் கடைசி 24 நிமிடங்கள் மற்றும் நவமி திதியின் முதல் 24 நிமிடங்களில் மகா பூஜை நடத்தப்படுகிறது.

முன்பு இந்த மகா பூஜையின் போது விலங்குகள் பலி கொடுக்கப்பட்டு வந்தன.  அதன் பிறகு அவை நிறுத்தப்பட்டு விட்டன. இப்போது அவ்வகையில் பக்தர்கள் வழக்கத்தை விடாமல் பூசனிக்காய், வாழைக்காய், வெள்ளரிக்காய்  உள்ளிட்டவற்றை வெட்டுகின்றனர்.  அத்துடன் பூஜை முடிந்து தீபாராதனையின் போது 108 அகல் விளக்குகளை ஏற்றி ம்பளின் அருளை வேண்டுவதும் வ்ழக்கமாகும்..