1959 ஆண்டு அக்21ந்தேதி தேதிலடாக் பகுதியில், சீன ராணுவத்தினரின் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் தங்கள் இன்னுயிரை நாட்டிகாக அர்ப்பணித்தனர். அன்றுமுதல், காவல் பணியின்போது வீரமரணமடைந்த காவலர்களுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் அந்நாளை காவலர்களின் நினைவு நாளாக ஆண்டுதோறும் நாடு முழுவதும் கடைபிடிக்கப் பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று டிஜிபி அலுவலக வளாகத்தில் காவல்துறையினர் சார்பில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து வீர காவலர்கள் நினைவுறுவ கற்சின்னங்களை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். பின் டிஜிபி அலுவலகத்தின் நுழைவாயில் பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து மகிழம் மரக்கன்றை நட்டு வைத்தனர்.
இந்த நிகழ்ச்சிகளில், அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி, உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் டிஜிபி ஜே.கே.திரிபாதி,ஏடிஜிபி ராஜேஷ் தாஸ் சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
காவலர் வீரவணக்க நாளையொட்டி காவலர் நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைத்து காவல் டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலும் மரியாதை செய்தனர்.