வாஷிங்டன்

மெரிக்க அதிபர் டிரம்ப் தனக்கு எதிராகப் போட்டியிடும் ஜோ பிடனை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வருகையில் போட்டி பிரசாரமும் அதிகரித்து வருகிறது.

தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஒபாமா ஆட்சிக்காலத்தைய துணை அதிபர் ஜோ பிடன் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

தேர்தல் பிரசாரத்தின் போது ஜோ பிடனை அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

டிரம்ப் ஜோ பிடன் குறித்து,

“நான் அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தால் வரலாற்றிலேயே மிக மோசமான ஒரு வேட்பாளரிடம் தோல்வி அடைந்ததாகக் கருதி வாழ்க்கையே வீண் எனக் கருதி நாட்டை விட்டு வெளியேறுவேன்”

எனத் தெரிவித்துள்ளார்.

இது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது