COVID-19 உடன் தொடர்புடைய ஒழுங்கற்ற இதயத் துடிப்பு நோய்க்கு CBDஐ சாத்தியமான சிகிச்சையாக பயன்படுத்த, கனடா நாட்டு மறுத்து நிறுவனமான அக்ஸீரா பார்மா திட்டமிட்டுள்ளது. மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஏற்றுமதி செய்வதற்காக இந்தியாவில் தனது துணை நிறுவனத்தையும் அறிமுகப்படுத்துகிறது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரால் நிறுவப்பட்ட, அக்ஸீரா பார்மா, இந்தியாவில் கஞ்சா செடியில் இருந்து பெறப்படும் சில வேதிப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கன்னாபிடியோல் (CBT) என்ற மருந்தைத் தயாரிக்கவும், சோதனை செய்யவும் திட்டமிட்டுள்ளது. COVID-19 காரணமாக உண்டாகும் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு நோய்க்கான சாத்தியமான சிகிச்சையாக இந்த மருந்து பயன்படுத்தப்படும். இந்தியாவில் பிரபலமான கஞ்சா தாவரத்தில் மூன்று வகைகள் உள்ளன – கஞ்சா சாடிவா, கஞ்சா இண்டிகா, மற்றும் கஞ்சா ருடரலிஸ். இந்த மூன்றும் மூளையின் செயல்பாடுகளையும், ஒருவரின் மனநிலையையும் நினவையும் பாதிக்கும் மனோவியல் விளைவுகளுக்கு அறியப்பட்டது. இதயத் துடிப்புகளை ஒருங்கிணைக்கும் மின் சமிக்ஞைகள் சரியாக இயங்காதபோது ஒழுங்கற்ற இதயத்துடிப்பு நோய் ஏற்படுகிறது. இது இதய செயலிழப்பை ஏற்படுத்தும்.
CBD ஒரு போதைப்பொருள் அல்ல
COVID-19 சிகிச்சைக்காக அக்ஸீரா நிறுவனம் உருவாக்கத் திட்டமிட்டுள்ள CBD, அமெரிக்கா உட்பட பல நாடுகளில், குழந்தை பருவ வலிப்பு அல்லது வலிப்பு நோய்களுக்கு சிகிச்சையளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, இதற்காக பாரம்பரிய மருந்துகள் எப்போதும் இயங்காது. சிபிடியின் நன்மை என்னவென்றால், அது போதைப பொருள் அல்ல. “எங்களிடம் தேவையான முன் மருத்துவ சோதனை தரவு உள்ளது. மருத்துவ பரிசோதனைகளுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம், ”என்று அக்ஸீரா பார்மாவின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான மனித் படேல் கூறினார். “எங்கள் பிரத்தியேக தயாரிப்பான CBD ஏற்கனவே வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு சிகிச்சைகளுக்கு ஒப்புதல்களைப் பெற்றுள்ளது. ஆகவே, அஜித்ரோமைசின் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் போன்ற மருந்துகளை மீண்டும் பயன்படுத்த பரிந்துரைக்கிறோம், ”என்று படேல் மேலும் கூறினார்.
அக்சீரா நிறுவனம் ஒப்புதலைப் இந்திய அரசின் மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரலை (டி.சி.ஜி.ஐ) அணுகுவதாகவும், எல்லாமே திட்டத்தின் படி நடந்தால், கோவிட் -19 க்கான CBT சிகிச்சை இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் கிடைக்கும் என்றும் படேல் கூறினார்.
ஒழுங்குமுறை மற்றும் கட்டுபாடுகள்
இந்தியாவில், போதைப்பொருள் மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்கள் (என்.டி.பி.எஸ்) சட்டம், 1985 இன் கீழ் கஞ்சாவை வளர்ப்பது மற்றும் வைத்திருப்பது சட்டவிரோதமானது. இந்த சட்டம் கஞ்சா உற்பத்தியை தடை செய்கிறது. இருப்பினும், தொழில்துறை அல்லது ஆராய்ச்சி நோக்கங்களுக்காக இதை வளர்ப்பதற்கு மாநில அரசுகள் உரிமங்களை வழங்கலாம். கஞ்சாவில் காணப்படும் CBT மற்றும் டெட்ராஹைட்ரோகன்னாபினோல் (டிஎச்சி) போன்ற வேதிப்பொருட்கள் குறித்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டத்தை மத்திய நிதி அமைச்சகம் அனுமதித்துள்ளது. ஆயுஷ் நிபுணர்களும் வலி நிவாரணி போன்ற மருத்துவ காரணங்களுக்காக கஞ்சாவை அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.