மும்பை

காராஷ்டிர மாநில தலைநகர் மும்பை உள்ளிட்ட பல நகரங்களுக்கு இன்று முதல் பல ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக நாடெங்கும் மார்ச் 23 முதல் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.  அதன் பிறகு மத்திய அரசு படிப்படியாகப் பல தளர்வுகளை அறிவித்தது.   அத்துடன் அந்தந்த மாநிலத்தில் உள்ள கொரோனா பாதிப்பின் அடிப்படையில் அம்மாநில முதல்வர்கள் முடிவு செய்யலாம் எனவும் அரிவிக்கப்படது.

அவ்வகையில் இன்று முதல் மகாராஷ்டிராவில் மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தளர்வுகள் அமல் படுத்தப்படுகிறது.  இன்று முதல் கடைகளைக் காலை 9 மணி முதல் இரவு 9 வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  வரும் 19 முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன.   பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்குத் தடை நீட்டிக்கப்பட உள்ளது.

மாநில அரசு வழிபாட்டுத் தலங்களுக்குத் தடையை நீக்க உத்தரவிட்டிருந்தது.  ஆனால் இது குறித்து மகாராஷ்டிரா மாநில ஆளுநருக்கும் முதல்வருக்கும் மோதல் வலுத்ததால் தற்போது மாநில அரசு வழிபாட்டுத் தலங்கள் மீதான தடையை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.