புதுடெல்லி:
தனி நபர் வருவாயில், நமது அண்டை நாடான வங்கதேசம், இந்தியாவை முந்த போகிறது என காங்கிரஸ்எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நிதியம் எனப்படும் ஐஎம்ப் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்றால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது . நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 10.3 சதவீதமாக குறைய வாய்ப்பு உள்ளது. அதேசமயம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 2021ல் 8.8 சதவீதமாக வளர்ச்சி அடையும். உலகில் அதிவேகமான வளர்ச்சியை கொண்ட நாடுகள் பட்டியலில் சேரும். சீனாவின் பொருளாதார வளர்ச்சியான 8.2 சதவீதத்தை விட இந்தியா முந்திவிடும். நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், தனிநபர் வருவாயில், வங்கதேசம், இந்தியாவை நெருங்கியுள்ளதாக தெரிவித்திருந்தது.
இந்த அறிக்கையை மேற்கோள் கோட்டி காங்கிரஸ் எம்.பி., ராகுல் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: ” பா.ஜ.,வின் வெறுப்பு நிரம்பிய கலாசார தேசியவாதத்தின் 6 ஆண்டு அருமையான சாதனை: வங்கதேசம் இந்தியாவை முந்த போகிறது” என தெரிவித்து, மத்திய அரசை கிண்டல் செய்யும் விதமாக கை தட்டும் படங்களையும் வெளியிட்டுள்ளார்.