புதுடெல்லி:
மத்திய அரசை சார்ந்த அனைத்து அமைச்சகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் அரசு நடத்தும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்(BSNL) மற்றும் மகாநகர் தொலைபேசி நிகாம் லிமிடெட்(MTNL) ஆகிய தொலைத்தொடர்பு சேவைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகியவற்றின் திறன்களை இந்தியாவை சார்ந்த அனைத்து அமைச்சகங்களும், பொதுத்துறை நிறுவனங்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தொலைத்தொடர்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 12-ஆம் தேதி தொலைத்தொடர்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய சேவைகளை அனைத்து அமைச்சகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மேலும் மத்திய அரசு மற்றும் நிதி அமைச்சகத்துடன் கலந்தாலோசித்த பிறகே இந்த அறிவிப்பு வெளியிடபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.