டில்லி
ந்த (2020 ஆம்) வருடத்தில் தனி நபர் ஜிடிபியில் இந்தியா வங்கதேசத்தை விடக் குறையும் என ஐ எம் எஃப் (சர்வதேச நாணய நிதியம்) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் பொருளாதார சரிவு அதிகரித்து வருவதாகத் தொடர்ந்து பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.   தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகெங்கும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளதால் அதன் தாக்கம் இந்தியாவில் அதிக அளவில் காணப்படுகிறது.   குறிப்பாகத் தனிநபர் ஜிடிபி மிகவும் குறையும் என உலக பொருளாதார பார்வை விவரங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 5 வருடங்களுக்கு முன்பு இந்தியாவின் தனி நபர் பொருளாதார வளர்ச்சி அண்டை நாடான வங்க தேசத்தை விட 40% அதிகமாக இருந்து வந்தது.  கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் தனிநபர் ஜிடிபி 3.௨% ஆக அதிகரித்துள்ளது.  ஆனால் வங்க தேசத்தின் தனிநபர் ஜிடிபி 9.1% அக உயர்ந்துள்ளது.   ஏற்றுமதி மூலம் வங்க தேசம் தனது மிகப் பெரிய அண்டை நாடான இந்தியாவை விட பொருளாதார வளர்ச்சி அதிகம் பெற்றுள்ளது.  இந்தியாவில் இந்த 5 ஆண்டுகளில் ஏற்றுமதி வெகுவாக குறைந்துள்ளது.

உலக பொருளாதார பார்வை விவரங்களைக் கொண்டு ஆய்வு நடத்திய சர்வதேச நாஊய நிதியம் (ஐ எம் எஃப்) இந்த வருடம் வங்க தேச தனிநபர் பொருளாதார வளர்ச்சி டாலர் மதிப்பில் 4% அதிகரித்து $1,888 ஆக இருக்கும் எனக் கணித்துள்ளது.  அதே வேளையில் இந்தியத் தனிநபர் பொருளாதார வளர்ச்சி 10.5% குறைந்து $1,887 ஆக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
இந்த கணக்கெடுப்பில் தெற்காசிய நாடுகளில் இந்தியாவை விட பாகிஸ்தான், மற்றும் நேபாளத்தில் தனி நபர் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கும் எனவும் வங்கதேசம், பூட்டான், இலங்கை, மற்றும் மாலதீவுகளில் அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்குதலால் இந்தியாவின் பொருளாதாரம் மற்ற தெற்காசிய நாடுகளை விட அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதே இதற்குக் காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.