சென்னை:கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வரும்  அமமுக பொருளாளர் வெற்றிவேல் கவலைக்கிடமாக உள்ளார்.

கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர தொடர்ந்து ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டு வந்தது. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கொரோனா தாக்கம் குறையவில்லை.
கொரோனாவை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந் நிலையில், அமமுக பொருளாளர் வெற்றிவேலுக்கு கொரோனா பாதிப்பு சில தினங்களுக்கு முன்னர் உறுதி செய்யப்பட்டது. வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிவேல் ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் என்பதால் அவரது ஆதரவாளர்களும், குடும்பத்தினரும் கவலையில் உள்ளனர்.

[youtube-feed feed=1]