அறிவோம் தாவரங்களை – அழிஞ்சில் மரம்
அழிஞ்சில் மரம். (Alangium salviifolium)
எல்லா ஊர்களிலும் வளரும் நல்ல மரம் நீ!
20 அடி உயரம் வளரும் இனிய மரம் நீ!
அங்கோலம், இலங்கி, அனஞ்சி என மூவகைப் பெயர்களில் விளங்கும் முத்துமரம்நீ!
’நீரில் நனைத்த வெண் துகில் போன்ற பூ மரம்’ எனத் திருத்தக்கதேவர் போற்றும் திவ்ய மரம் நீ!
தொல்காப்பியர் குறிப்பிடும் அழிஞ்சில் மரம் நீ! ‘
புலிப்பாணி’ சித்தர் போற்றும் புனித மரம் நீ!
முயல் கடி, நாய்க் கடி, எலி கடி, கொப்புளம், உடல் சூடு, வயிற்றுப்புழுக்கள்,மேகப் புண், தோல் நோய், மலச் சிக்கல், சொறி, சிரங்கு, தோல் நோய், மூட்டு வலி, கீல் வாதம், பாத வெடிப்பு, பாத எரிச்சல், முகப்பரு, கப நோய் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!
மரப்பொருட்கள், இசைக்கருவி, கட்டிடப்பணி பொருட்கள் செய்யப் பயன்படும் நயன்மிகு மரமே!
ஆதிசங்கரர் போற்றிய தெய்வீக மரமே!
பொன்னேரிக்கு அருகில் உள்ள ‘சின்னகாவனம்’ சிவன் கோயிலின் தலமரமே!
செங்கல்பட்டின் அருகில் உள்ள ‘சிங்கப் பெருமாள்’ கோயிலுக்குச் சிறப்பும் அழகும் சேர்க்கும் அற்புத மரமே!
விதை, பட்டை, இலை என எல்லாம் பயன்படும் நல்ல மரமே! பறவைகளின் சரணாலயமே!
நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!
நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)
முதல்வர்
ஏரிஸ் கலைக் கல்லூரி,
வடலூர்.📱9443405050