பாட்னா: பீகாரில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த அமைச்சர் வினோத்குமார் சிங் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
54 வயதான அவர், சில நாள்களுக்கு முன்னர் மூச்சுத் திணறல் காரணமாக டெல்லியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், ஜூன் மாதம் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து, பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வினோத் குமார் சிங் சேர்க்கப்பட்டார். சிகிச்சையில் இருந்து அவர் மீண்டார். ஆனாலும் முழு குணம் அடையாததால் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டது.
இதையடுத்து, மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவிற்கு பீகார் முதல்வர் நிதீஷ் குமார், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.