டெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக முழு ஆன்லைன் சேர்க்கை செயல்முறை இன்று முதல் தொடங்கியுள்ளது.
நடப்பாண்டில் டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் சேர்க்கை முறை தொடங்கப்பட்டு உள்ளதால், மாணவர்களை நேரில் சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அறிவித்தபடி, சேர்க்கை முறை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது என்று பல்கலைக்கழக இயக்குநர் ஷோபா பாகாய் கூறியுள்ளார். சேர்க்கை செயல்முறைகள், மதிப்பெண்கள் கணக்கிடும் வழிமுறைகள் என அனைத்து தகவல்களும் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
5 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை சேர்க்கைக்கு 100 சதவீதம் கட் ஆப் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் 70 ஆயிரம் இடங்களுக்கு 3.57 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.