அபுதாபி: டெல்லிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது மும்பை அணி.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை அடித்தது.
பின்னர், 163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியில், கேப்டன் ரோகித் ஷர்மா 5 ரன்களுக்கு அவுட்டானார். ஆனால், மற்றொரு துவக்க வீரர் குயின்டன் டி காக் 36 பந்துகளில் 53 ரன்களை அடித்தார்.
சூர்யகுமார் யாதவ் 32 பந்துகளில் 53 ரன்களை அடிக்க, இஷான் கிஷான் 15 பந்துகளில் 28 ரன்களை சேர்த்தார். கடைசி கட்டத்தில், குருணால் பாண்ட்யா 7 பந்துகளில் 12 ரன்களை அடித்து மும்பை அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி தனது 5வது வெற்றியையும், இந்தத் தோல்வியின் மூலம் டெல்லி அணி தனது 2வது தோல்வியையும் பதிவுசெய்தன.