பாட்னா
பீகார் சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையில் பங்கு பெறும் காங்கிரஸ் கட்சி நட்சத்திர பேச்சாளர் பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட தேர்தல் அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 3 மற்றும் மூன்றாம் கட்ட தேர்தல் நவம்பர் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10 நடைபெறுகிறது.
இதில் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர் பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் சோனியா காந்தி, ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத், சச்சின் பைலட், ராஜஸ்தான் முதல்வர் கெலோட் ஆகியோர் பெயர்கள் உள்ளன
மேலும் பஞ்சாப், சத்தீஸ்கர் முதல்வர்கள், ஷக்தி சிங் கோகில், தாரிக் அன்வர், சத்ருகன் சின்கா, ஷகீல் அகமது, கீர்த்தி ஆசாத், நிகில் குமார், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அனில் சர்மா, பிரமோத் திவாரி, அகிலேஷ் பிரதாப் சிங், உதித் ராஜ் மற்றும் ராஜ்பப்பர் ஆகியோர் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த தேர்தலில் ராகுல் காந்தி 6 பிரச்சார பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.