புதுடெல்லி: இந்தியாவின் இளம் செஸ் நட்சத்திரம் நிஹல் சரின், செஸ்.காம் -இன் 2020 ஜூனியர் ஸ்பீடு ஆன்லைன் செஸ் சாம்பயின்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.
உலக ஜூனியர் தரவரிசையில் 6வது இடத்திலுள்ள ரஷ்யாவின் அலெக்சி சரனாவை 18-7 என்ற புள்ளிக் கணக்கில் வென்று இப்பட்டத்தைக் கைப்பற்றினார் நிஹல் சரின்.
இந்த வெற்றியின் மூலம் நிஹலுக்கு 8766 டாலர்கள் பரிசுத் தொகையாக கிடைத்துள்ளது. இதன்மூலம் 2020 ஸ்பீடு செஸ் சாம்பியன்ஷிப் இறுதிக்கு அவர் தகுதிபெற்றுள்ளார்.
தனது சாம்பியன் பட்டப் பயணத்தில் அமெரிக்காவின் ஆண்ட்ரூ டாங், ஆஸ்திரேலியாவின் ஆண்டன் ஸ்மிர்னோவ் மற்றும் ஆர்மீனியாவின் ஹெய்க் மார்டிரோஸ்யான் ஆகியோரை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.