புதுடெல்லி:
த்திய அரசால் கடந்த மாதம் கொண்டுவரப்பட்ட விவசாய சட்ட மசோதாவுக்கு தங்களுடைய எதிர்ப்பை அரசியல் ரீதியாக தெரிவிக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்ல வாய்ப்பில்லை என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த வாரம் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் நடந்த விவசாய சட்ட மசோதாவிற்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். பல போராட்டத்திற்கு மத்தியில் பாராளுமன்றத்தில் இந்த விவசாய மசோதாவை நிறைவேற்றியதால் மேலவையிலிருந்து எட்டு எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 6 ஆண்டுகளில் மத்திய அரசு கொண்டு வந்த கொள்கைகள் எதுவும் ஏழை மக்களுக்கு பயனளிக்கவில்லை, ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். இதற்கிடையில், விவசாயிகளுக்கு எதிரான மூன்று விவசாய மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. மக்கள் அவதிப்பட்டு வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், விவசாய மசோதாவை உடனடியாக நிறைவேற்றுவதற்கான அவசியம் என்ன இருக்கிறது??? இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த மசோதாவை நிறைவேற்றினால் விவசாயிகள், எதுவும் செய்யமாட்டார்கள் என்று மத்திய அரசு நினைத்து விட்டது போலும்… ஆனால் விவசாயிகளின் சக்தி அவர்களுக்கு தெரியவில்லை, என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பஞ்சாப் மாநிலத்தின் சங்க்ரூரில் நடந்த கேத்தி பச்சாவ் போராட்டத்தில் தெரிவித்துள்ளார். மேலும் சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் பணமதிப்பிழப்பு குறித்து ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதைப் பற்றி காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளதாவது: நாங்கள் மத்திய அரசின் விவசாய மசோதாவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வாய்ப்பில்லை, ஏனெனில் உச்ச நீதிமன்றம் விவசாயிகளுக்கும், எங்களுக்கும் சாதகமாக எதையும் தெரிவிக்காது. ஆகையால் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் சிறப்பு சட்டசபை அமர்வுகளை பயன்படுத்தி நாங்களே எங்கள் சொந்த விவசாய மசோதாக்களை உருவாக்கி நிறைவேற்றிக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு எதிரான விவசாய சட்ட மசோதாவுக்கான நீதிமன்றத்தின் முடிவு குறித்து கட்சிக்கு உறுதியாக எதுவும் தெரியாது, உச்சநீதிமன்றம் அரசாங்கத்திற்கு ஆதரவாக தீர்ப்பளிக்கும் என்பதால் நாங்கள் தற்போது சரியான முடிவெடுத்துள்ளோம் என்று மற்றொரு காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.