புதுடெல்லி:
ந்திய ராணுவ வீரர்கள் நமக்காக தேச எல்லைகளில் நின்று போராடி வருகின்றனர், ஆனால் நமது பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரர்களுக்காகவும், ஏழை மக்களுக்காகவும் நிதி இல்லை என்று தெரிவித்துவிட்டு, விமானங்கள் வாங்குவதற்காக நிதியை பயன்படுத்துகிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

அக்டோபர் 1-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி… ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ல் மற்றும் பிரதமர் பயன்படுத்த தனி பயணிக்கான B777 விமானத்தை வாங்கினார்., காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இதனை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதைப் பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி தெரிவித்துள்ளதாவது:
நாட்டின் நிதியை ஏழை மக்களுக்கும், சியாச்சின்-லடாக் எல்லைகளில் போராடிவரும் ராணுவ வீரர்களுக்கு பயன்படுத்தாமல், தனக்காக 8,400 கோடி மதிப்புள்ள விமானத்தை வாங்கியுள்ளார், இது நியாயமானதாக தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அதே பணத்தை ராணுவ வீரர்களுக்கு சூடான உடைகள், ஜாக்கெட்டுகள், கையுறைகள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்க பயன்படுத்தியிருக்கலாம். நாட்டு மக்கள், ராணுவ வீரர்கள் என்று யாரைப் பற்றியும் கவலைப்படாத பிரதமர் நரேந்திர மோடி தன்னை பற்றி மட்டும் கவலை கொள்கிறார் என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்காக 8,400 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கிய B777 விமானம் சூரியனிலிருந்து வெளிப்படும் புறஊதா கதிர்களிலிருந்து பாதுகாக்க கூடியது, மேலும் இந்த விமானத்தில் சுய பாதுகாப்பு அறைகள் எனப்படும் அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் இருக்கும் என்றும் இதைப் பற்றி தெரிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் நண்பரான டொனால்ட் ட்ரம்ப் இதைப் போன்று ஒரு விமானம் வைத்துள்ளதால், நமது பிரதமரும் தற்போது விமானம் வாங்கும் செலவில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை வீனடித்துள்ளார், என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.