ஷார்ஜா: ராஜஸ்தான் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 185 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, டெல்லியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி அணியில் துவக்கம் எதிர்பார்த்த மாதிரி அமையவில்லை.
பிரித்விஷா 19 ரன்களும், ஷிகர் தவான் 5 ரன்களும், ஷ்ரேயாஸ் 22 ரன்களும் மட்டுமே அடித்தனர். ஸ்டாய்னிஸ் 30 பந்துகளில் 39 ரன்களையும், ஹெட்மேயர் 24 பந்துகளில் 5 சிக்ஸர்கள் & 1 பவுண்டரியுடன் 45 ரன்களும் அடிக்க, டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை எடுத்தது.
அக்ஸார் படேல் 8 பந்துகளில் 17 ரன்களை எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சருக்கு 3 விக்கெட்டுகள் கிடைத்தன. தியாகி, ஆண்ட்ரு டை மற்றும் ராகுலுக்கு தலா 1 விக்கெட் கிடைத்தது. 2 ரன்அவுட்டுகள் செய்யப்பட்டன.
இன்றையப் போட்டியில், ஸ்மித், சஞ்சு சாம்ஸன் மற்றும் ராகுல் ஆகியோர் எழுச்சிப் பெறுவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.