டெல்லி: மத்திய அமைச்ச்ர ராம்விலாஸ் பாஸ்வான் மறைவிற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மத்திய நுகர்வோர் விவகாரம் உணவு மற்றும் பொது வினியோகத்துறை மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உடல்நலம் பாதிக்கப்பட்டு டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்க இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதையடுத்து, தொடர்ந்து சிகிச்சை பெர்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதை அவரது மகன் சிராக் பாஸ்வான் டிவிட்டரில் தகவல் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ராம்விலாஸ் பாஸ்வான் மறைவிற்கு அகிலஇந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி வெளியிட்ட இரங்கல் தெரிவித்து, அவரது மகனுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில், ராம்விலாஸ் பஸ்வான்ஜியின் மரணம் குறித்த செய்தி வருத்தமளிக்கிறது. ஏழை மற்றும் ஒடுக்கப்பட்டோர்கள் தங்களின் வலுவான அரசியல் குரலை இன்று இழந்துள்ளனர். மேலும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.