துபாய்: ஐபிஎல் லீக் சுற்று போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில், நேற்றைய நிலவரப்படி, மும்பை அணி புள்ளிகள் அடிப்படையில் முதலிடத்தில் நீடிக்கிறது. சென்னை அணி 5வது இடத்திலிருந்து 6வது இடத்திற்கு சென்றுவிட்டது
டெல்லி அணி புள்ளிகள் அடிப்படையில், மும்பை அணிக்கு சமமாக இருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் மும்பைக்கு அடுத்த இடத்தில் உள்ளது. இரு அணிகளும் தலா 8 புள்ளிகளைப் பெற்றுள்ளன.
அடுத்த மூன்று இடங்களில், தலா 6 புள்ளிகளுடன் ஐதராபாத், கொல்கத்தா மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் உள்ளன.
சென்னை அணி, கொல்கத்தாவிடம் தேவையின்றி தோற்றதால், ஆறாவது இடத்திற்கு சரிந்துவிட்டது. ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள், முறையே 7வது மற்றும் 8வது இடங்களில் உள்ளன.