டில்லி
இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக ராஜேஸ்வர் ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக விஸ்வநாதன் பதவி வகித்து வந்தார்.
கடந்த மார்ச் மாதம் விஸ்வநாதன் உடல் நிலை காரணமாகப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
தற்போது ராஜேஸ்வர் ராவ் ரிசர்வ் வங்கி துணை ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்பு வங்கி ஒழுங்குமுறைகளில் நிர்வாக இயக்குநராகப் பதவி வகித்து வந்தார்.
ராஜேஸ்வர் ராவ் ஏற்கனவே ரிசர்வ் வங்கியின் பல துறைக்லில் 36 ஆண்டுகளாகப் பணி புரிந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.