ஷார்ஜா: சென்னை அணிக்கு 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா அணி. 20 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது கொல்கத்தா அணி.
சென்னை அணி இன்றும் பிரமாண்ட வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்யவே, 6வது முறையாகவும் சேஸிங் செய்ய வேண்டிய நிலை சென்னை அணிக்கு.
கொல்கத்தா அணியின் துவக்க வீரர் ராகுல் திரிபதி 51 பந்துகளில் 3 சிகஸர்கள் & 8 பவுண்டரிகளுடன் 81 ரன்களை விளாசினார். ஆனால், அவரைத் தவிர வேறு எந்த பேட்ஸ்மெனும் 20 ரன்களைக்கூட தொடவில்லை என்பதுதான் சுவாரஸ்யம்.
கேப்டன் தினேஷ் கார்த்திக், இந்தமுறை 7வது நிலையிலேயே களமிறங்கினார். அவர் அடித்தது வெறும் 12 ரன்கள் மட்டுமே. நான்காவது நிலையில் களமிறங்கிய சுனில் நரைன் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 17 ரன்களை அடித்தனர்.
இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்களை அடித்தது கொல்கத்தா அணி.
சென்னை அணி சார்பில் பிராவோ 3 விக்கெட்டுகளை எடுக்க, சாம் கர்ரன், ஷர்துல் தாகுர் மற்றும் கார்ன் ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். தீபக் சஹார் அதிகபட்சமாக 47 ரன்களை விட்டுக்கொடுத்து, 1 விக்கெட் கூட எடுக்கவில்லை.