டெல்லி: டெல்லியில் பிரபல மருத்துவமனையில் ஊதியம் வழங்காததை கண்டித்து மருத்துவர்கள், செவிலியர்கள்  வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு டெல்லியில் மாநகராட்சியில் மிகப்பெரிய மருத்துவமனையாக இருப்பது ஹிந்து ராவ் மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனையில் ஜூன் முதல் மருத்துவர்களுக்கும், செவிலியர்கள், பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
அதை கண்டித்து பணியை புறக்கணித்து  மருத்துவர்கள், மருத்துவமனை வளாகத்திலேயே போராட்டத்தில் குதித்தனர். ஊதியம் தரவில்லை என்றால் பணியை தொடர மாட்டோம் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பொருளாதார சுமையை தாங்க முடியாமல் உள்ளதாகவும், கடிதம் மூலம் வலியுறுத்தியும் மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

[youtube-feed feed=1]