அறிவோம் தாவரங்களை – சாமை

சாமை (Panicum sumatrense)

தெற்கு ஆசியா உன் தாயகம்!

புஞ்சை நிலங்களில் பயிரிடப்படும் தானியப் பயிர் நீ!

ஆங்கிலத்தில் நீ லிட்டில் மில்லட், ஹிந்தியில் நீ குட்கி, தெலுங்கில் நீ சாமலு,மலையாளத்தில் நீ ஸாம.

ஒரு மீட்டர் வரை உயரம் வளரும் உன்னதத் தானியப் பயிர் நீ!

5000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய அற்புதத் தானியப் பயிர் நீ!

பண்டைய தமிழ்க்கல்வெட்டுகள், தொல்பொருள் ஆய்வில் காணப்படும் தொன்மைத் தானியம் நீ!

இந்தியா, இலங்கை, நேபாளம், மலேசியா நாடுகளில் அதிகமாகப் பயிரிடப்படும் அற்புதத் தானியப் பயிர் நீ!

எலும்பு வலிமை, மலச்சிக்கல், காய்ச்சல், வயிற்றுநோய்கள், ஆண்மை சக்தி, நீரிழிவு, நாவறட்சி, தலைவலி, ரத்த சோகை, வயிற்றுப்புண், மாதவிடாய், இதய நோய், பித்தம், வாதம் ஆகியவற்றுக்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

மாவு தோசை, ஆப்பம், புட்டு, கேக், இடியாப்பம், முறுக்கு, சாதம், பிஸ்கட், கிச்சடி, அடை, புலாவ், பிரியாணி எனப்  பல்வகையில் பயன்படும் நல்வகைத் தானியப் பயிர் நீ!

நெல் அரிசியை விட ஏழு மடங்கு அதிக நார்ச்சத்து கொண்ட நலமிகு பயிரே!

ஏக்கருக்கு 800 கிலோ வரை விளையும் இனிய பயிரே!

பூச்சிகள் அண்டாத புனிதப் பயிரே!

உடலுக்கு வலிமையும் அழகும் சேர்க்கும் உன்னதப் பயிரே!

குழந்தைகளுக்கு ஏற்ற சத்துமாவு பயிரே!

நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! வளர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)

முதல்வர்

ஏரிஸ் கலைக் கல்லூரி,

வடலூர்.📱9443405050.