கள்ளக்குறிச்சி: ‘என்னை யாரும் கடத்தவில்லை’ என கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏவை காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் சவுந்தர்யா தெரிவித்து உள்ளார். அது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
தியாகதுருகத்தைச் சேர்ந்த 2ம் ஆண்டு கல்லூரி மாணவி சவுந்தர்யா (வயது 18) என்ற இளம்பெண்ணை 38 வயதான கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு கடத்தி வந்து திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு ஜாதி மதம் என்பதால், இவர்களின் திருமணம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பெண்ணின் தகப்பனார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் பதிவு செய்துள்ளார். இது தொடர்பான விசாரணை நாளை நடைபெற உள்ளது.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ, பிரபு, தனது திருமணம் காதல் திருமணம் என்றும், எங்களது திருமணம் குறித்து வதந்திகள் வருகின்றன. நான் சவுந்தர்யாவை கடத்தியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வதந்திகள் பரவுகின்றன. ”நானும் சவுந்தர்யாவும் கடந்த நான்கு மாதங்களாக காதலித்து வந்தோம். முறைப்படி பெண் கேட்டு சவுந்தர்யாவின் வீட்டுக்கு சென்றோம். அவர்களது வீட்டில் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆதலால், என்னுடைய பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டோம்” என்று வீடியோ வெளியிட்டிருந்தார்.
அதைத்தொடர்ந்து தற்போது சவுந்தர்யாவும், தனது திருமணம் தொடர்பாக விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.