
டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியாகி உலகமெங்கும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மிஷன் இம்பாசிபிள்’. இப்பட வரிசையில் இதுவரை ஆறு பாகங்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆண்டு தொடங்கவிருந்த ‘மிஷன் இம்பாசிபிள் 7’ படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.
இப்படத்தை இயக்கும் பொறுப்பை கிறிஸ்டோபர் மெக்குயரியிடம் பாராமவுண்ட் நிறுவனம் வழங்கியுள்ளது.
ஊரடங்கு தளர்வினால் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நார்வேயில் நடைபெற்ற நிலையில், ஓடும் ரயிலின் மேற்புறம் எடுக்கப்பட்ட சண்டை காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
ரெபேக்கா பெர்குசன், விங் ரேம்ஸ், சைமன் பெக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படம், அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. [youtube-feed feed=1]