சென்னை: தமிழகத்தில் பாஜக ஆட்சி தான் நடக்கிறதா? என்று கனிமொழி எம்.பி கைது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி சென்ற திமுக எம்பியும், மகளிரணி செயலாளருமான கனிமொழி கைது செய்யப்பட்டார். இந்த கைதுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி உள்ளதாவது: ‘அராஜகத்தைக் கண்டித்து திமுக மகளிரணி நடத்திய ஒளி ஏந்திய பேரணியை தடுத்து, கைது செய்திருக்கிறது தமிழக காவல்துறை. உ.பி.கொடூரத்துக்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல இது! தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி தான் நடக்கிறதா? அதிமுக அரசு தனது அராஜக குணத்தை கைவிட வேண்டும்! என்று தெரிவித்துள்ளார்.