சென்னை: பள்ளிகள் திறப்பு குறித்து, நாளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்துகிறார்.

அக்டோபர் 1 முதல் 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் பாடங்களில் சந்தேகம் கேட்க பள்ளிகளுக்கு பெற்றோர் அனுமதியுடன் வரலாம் என்று தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் அடுத்த சில நாட்களில் இந்த அறிவிப்பை தமிழக அரசு நிறுத்தி வைத்தது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையவில்லை. இந்நிலையில், அடுத்த மாதம் 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை துவக்குவது, பாடத்திட்டங்கள் குறித்து, துறை செயலாளர் மற்றும் இயக்குனர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.
நாளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார் . அதற்காக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் நாளை சென்னை வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel