சென்னை: மாநிலத் தலைநகர் சென்னையில் விற்பனை செய்யப்படும் கேன் குடிநீரில், 45% குடிநீர் பாதுகாப்பற்றது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
நாடு முழுவதும் வருமானம் மிக்க தொழில்களில் ஒன்றாக கேன் வாட்டர் தொழில் மாறி உள்ளது. வியாபாரத்தில் விரைவில் முன்னேற் வேண்டுமா? அதிக அளவில் பணம் சம்பாதிக்க வேண்டுமா? உடனே தொடங்கப்படுவது சுத்தகரிக்கப்பட்டு தண்ணீர் விற்பனை நிலையில். சென்னை போன்ற நகரங்களில், மக்களின் அதிக தேவை காரணமாக, கேன் வாட்டர் தொழிலில் கொள்ளை லாபம் அடைந்து வருகின்றனர் வியாபாரிகள். ஆனால், இந்த கேன் வாட்டர் எந்த அளவுக்கு சுத்தமானது, எப்படி சுத்திகரிக்கப்படுகிறது, என்பது எவரும் கண்டறிய முடியாத ரகசியம்.
சென்னையில் ஆயிரக்கணக்கான கேன் வாட்டர் நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அதை ஒழுங்குபடுத்த உயர்நீதிமன்றம் பல அதிரடி உத்தரவை பிறப்பித்தும், மாநில அரசு, இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்சி வருகிறது. அதிக லாபம் ஈட்டும் இந்த தொழில் மூலம், அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தேவையான வசதிகள் கிடைப்பதால், தண்ணீரின் சுத்தம் எந்நதளவுக்கு உள்ளதை என்பதை கவனிக்க தவறுகின்றனர். நமது மக்களும், குழாயில் வரும் தண்ணீர் சுத்தமில்லை, கேன் தண்ணீர்தான் சுத்தமான என்ற மனநிலைக்கு மாறி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் விற்பனை செய்யப்பட்டு வரும் தண்ணீர் கேன்கள், பாட்டில்கள் மற்றும் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் தயாரிக்க கூடிய தண்ணீர் ஆகியவற்றின் 187 மாதிரிகளை சென்னை மாநகராட்சி ஆய்வுக்காக அனுப்பி உள்ளது. இதனுடைய தரம் குறித்த முடிவுகள் என்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதாவது, ஆய்வுக்காக சேகரிக்கப்பட்ட 187 மாதிரிகளில் 40 மாதிரிகள் குடிப்பதற்கு தரமற்ற தண்ணீர் என்பது தெரிந்துள்ளது.
மேலும் எஞ்சியுள்ள 147 குடிநீர் மாதிரிகளில் 30 மாதிரிகளில், பாக்டீரியா வைரஸ் பரவல் இருப்பதும், 20 மாதிரிகளில் போலியான நிறுவனங்களின் பெயர் சீலுடன் விற்கப்படுவதும் தெரியவந்துள்ளது. மொத்தத்தில் சென்னையில் விற்பனை செய்யப்படும் பேக்கிங் மற்றும் கேன் வாட்டர்கள் 45 சதவிகிதம் குடிக்க சாதகமானது இல்லை என்றும், இதுபோன்ற தரமற்ற நீரை குடிப்பதால், பொதுமக்கள் காலரா, டைபாய்டு போன்ற நோய்கள் நேரிடும் வாய்ப்பு இருப்பதாகவும் அச்சம் தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயத்தின் தெற்கு மண்டல உறுப்பினர்கள் நீதிபதி ஜே. எம். ராமகிருஷ்ணன் மற்றும் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர், எற்கனவே கேன் வாட்டர் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் மனுவை தள்ளுபடி செய்வதாகவும், நீதிமன்றமே நேரடியாக, இதை கண்காணித்து வருவதால், இதில் பசுமை தீர்ப்பாயம் தலையிட எந்தவித அவசியமும் இல்லை என்று அறிவித்து உள்ளது.