டெல்லி: கொரோனா பரவல் காரணமாக அக்டோபர் 31ம் தேதி வரை டெல்லியில் பள்ளிகள் திறக்கப்படாது என்று துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, டெல்லியில் அக்டோபர் 5ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அனைத்து பள்ளிகளும் அக்டோபர் 31ம் தேதி வரை திறக்கப்படாது என்று துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்தார்.

கொரோனா பரவல் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் சுகாதாரத்துறை ஈடுபட்டு வருகிறது. அதே நேரத்தில், ஊரடங்கில் ஒருசில தளர்வுகளும் அளிக்கப்பட்டு உள்ளன.
Patrikai.com official YouTube Channel