லக்னோ: ஹத்ராஸ் பாலியல் சம்பவம் ஓய்வதற்கு முன்பாக அதே போன்று வேறொரு பாலியல் வன்கொடுமை படுகொலை சம்பவம் கான்பூர் அருகே நிகழ்ந்துள்ளது, தெரிய வந்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் கான்பூர் தேஹத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் செப்டம்பர் 26ம் தேதி காணாமல் போன சிறுமியின், உடல் அங்குள்ள வயல்வெளியில் சிதைந்த நிலையில் காணப்பட்டது.
சிறுமியின் குடும்பத்தின் உறவினர்கள் இருவரும் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். அந்த சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பிரேத பரிசோதனைக்காக உடல் பாகங்களை அனுப்பியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சிறுமியின் தந்தைக்கும், அவர்களுக்கும் நில தகராறு இருப்பதாகவும், அவர்களை அச்சுறுத்திய 2 நபர்கள், மகளை கொலை செய்ததாகவும் கூறியுள்ளனர்.
நாங்கள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகிறோம் என்று கான்பூர் தேஹாத் போலீஸ் கண்காணிப்பாளர் சவுத்ரி தெரிவித்துள்ளார். ஹத்ராஸ் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே போன்று மேலும் ஒரு சம்பவம் உ.பி மாநிலத்தில் நடைபெற்றுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Patrikai.com official YouTube Channel