பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் ரபேல் நாடல், டொமினிக் தியம், ஹாலெப் உள்ளிட்ட நட்சத்திரங்கள்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றுப் போட்டியில், இத்தாலி வீரர் ஸ்டெபானோ டிராவாக்லியாவை வென்று நான்காவது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு 3வது சுற்றுப் போட்டியில் நார்வேயின் காஸ்பர் ருடுவை தோற்கடித்தார் ஆஸ்திரியாவின் டொமினிக் தியம்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில், 3வது சுற்றில், ருமேனியாவின் ஹாலெப், அமெரிக்காவின் அமன்டா அனிசிமோவாவ‍ை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு 3வது சுற்றுப் போட்டியில், உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா, ரஷ்ய நாட்டின் எகடெரினா அலெக்சாண்ட்ரோவாவை தோற்கடித்து 4வது சுற்றுக்கு முன்னேறினார்.