சென்னை: தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், சேலம், தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலையானது அதிகபட்சமாக 34 டிகிரி செல்ஸியசை ஒட்டி இருக்கும்.
அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். அதேபோல, அக்டோபர் 5 வரை வட மேற்கு வங்கக் கடல், ஒடிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.