துபாய்: ஐதராபாத் நிர்ணயம் செய்த 164 என்ற இலக்கை எட்ட முடியாத தோனியின் சென்னை அணி 157 ரன்கள் மட்டுமே எடுத்து தனது 3வது தோல்வியை தொடர்ச்சியாக பதிவு செய்தது.
தொடக்க வீரர்கள் அனைவரும் சொதப்ப, ஜடேஜா 35 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 50 ரன்களை அடித்து அவுட்டானார். 7வது வீரராக களமிறங்கிய சாம் குர்ரன் 5 பந்துகளில் 15 ரன்களை மட்டுமே அடித்தார்.
தோனி கடைசி நேரத்தில் மாயமந்திரம் செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், நடந்ததோ வேறு. கடைசி ஓவரில், 1 ஓவருக்கு 23 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 15 ரன்களைத்தான் எடுக்க முடிந்தது சென்னை அணியால்.
கடைசி வரை களத்தில் நின்ற தோனி, எதிர்பார்த்த இன்னிங்ஸை ஆடாமல், 36 பந்துகளில் 47 ரன்களை மட்டுமே அடித்தார். இதனால், 20 ஓவர்களில் 157 ரன்கள் மட்டுமே கிடைத்தது.
ஐதராபாத் அணியின் தங்கராசு நடராஜனும், அப்துல் சமதும் 4 ஓவர்களுக்கு 40 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுக்க, ரஷித் கானோ 4 ஓவர்களுக்கு வெறும் 12 ரன்களை மட்டுமே கொடுத்து ஆச்சர்யமூட்டினார்.