துபாய்: ஐதராபாத் அணி நிர்ணயித்த 164 ரன்கள் என்ற இலக்கை சேஸிங் செய்யும் சென்னை அணி, 13 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 61 ரன்களை மட்டுமே எடுத்து தள்ளாடி வருகிறது.
துவக்க வீரர் ஃபாஃப் டூ பிளெசிஸ் 19 பந்துகளுக்கு 22 ரன்களை மட்டுமே அடிக்க, மற்றொரு துவக்க வீரர் ஷேன் வாட்சன் 6 பந்துகளுக்கு 1 ரன் மட்டுமே எடுத்து அவுட்டானார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அம்பதி ராயுடு 9 பந்துகளில் 8 ரன்களும், மோசமாக ஆடிவரும் கேதார் ஜாதவ் 10 பந்துகளில் 3 ரன்களையும் எடுத்து நடையைக் கட்டினர்.
தற்போது தோனியும், ஜடேஜாவும் களத்தில் உள்ளனர். தோனி, 18 பந்துகளில் 15 ரன்களை எடுத்து தடவி வருகிறார். ஜடேஜாவோ 16 பந்துகளில் 8 ரன்களை அடித்து டெஸ்ட் ஆட்டம் ஆடி வருகிறார். இந்தப் போட்டியிலும் சென்னை அணி கட்டாயம் தேறாது என்பதே பொது கருத்தாக உள்ளது.
ஐதராபாத் அணியின் புவனேஷ்வர் குமார், 2 ஓவர்கள் வீசி, வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.