துபாய்: ஐதராபாத் அணிக்கு எதிராக டாஸ் தோற்ற தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ், இன்றும் முதலில் பீல்டிங் செய்யவுள்ளது. இதுவரையான மூன்று போட்டிகளில் டாஸ் வென்றும் தொடர்ந்து பீல்டிங்கையே தேர்வுசெய்து சர்ச்சைக்கு உள்ளானார் தோனி. தற்போது சற்று மாறி நடந்துள்ளது அவ்வளவே!
சென்னை அணியில் எதிர்பார்த்தபடியே, அம்பதி ராயுடு மற்றும் பிராவோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். முரளி விஜய் மற்றும் ஹேசில்வுட் இடம்பெறவில்லை. அதேசமயம், ஷர்துல் தாகுர் இடம்பெற்றுள்ளார்.
அதேசமயம், பார்மில் இல்லாத கேதார் ஜாதவ் இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பேட்டிங்கில் கேப்டன் தோனி 5வது வரிசையில் களமிறங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
துவக்க வீரர்களான அம்பதி ராயுடு மற்றும் ஷேன் வாட்சனின் ஆட்டத்தைப் பொறுத்தே, சென்னையின் வெற்றி தீர்மானிக்கப்படும் என்று கூறப்படுகிறது.