பாலாசோர்: சூப்பர்சோனிக் பிரம்மோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக இந்தியா சோதனை செய்துள்ளது.

இந்த ஏவுகணையானது 400 கி.மீ தூரத்தில் இருக்கும் இலக்குகளை துல்லியமாக குறி வைத்து தாக்கும் திறன் கொண்டது. பிரம்மோஸ் இந்தியாவின் மிக ஆபத்தான ஏவுகணையாகும்.

இந்தியா, ரஷ்யா இணைந்து இந்த ஏவுகணையை உருவாக்கியுள்ளன. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பிஜே -10 திட்டத்தின் கீழ் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை முதலில் 290 கிலோமீட்டர் சென்று தாக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது. பின்னர், அதன் இலக்கு 400 கிலோமீட்டருக்கு மேலாக நீட்டிக்கப்பட்டது.