பெங்களுரூ:
யங்கரவாத நடவடிக்கைகளின் மையமாக பெங்களூரு மாறியுள்ளது என்று பாஜக எம்பி தேஜஸ்வி சூரியா நேற்று தெரிவித்ததோடு, பெங்களூரில் தேசிய புலனாய்வு அமைப்பின் நிரந்தர பிரிவை அமைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இதைப் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய பாஜக இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூரியா தெரிவித்துள்ளதாவது: கடந்த காலங்களில் இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கான பெங்களூருவில் பல பயங்கரவாத அமைப்புக்கள் உடைக்கப்பட்டுள்ளன, ஆனால் தற்போது பயங்கரவாதிகள் நம் நகரத்தை அடைகாக்கும் மையமாக பயன்படுத்த விரும்புகின்றனர் என்றும், பெங்களூரு பயங்கரவாத நடவடிக்கைகளின் மையமாக மாறியுள்ளது, பெங்களூரில் உள்ள புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்ட பல கைதிகள் மற்றும் ஸ்லீப்பர் செல்கள் மூலம் இது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் டிஜே ஹள்ளி மற்றும் கேஜி ஹல்லியில் நடந்த வன்முறை தொடர்பான தேசிய புலனாய்வு விசாரணைகள் பல பயங்கரவாத அமைப்புகள் பெங்களூரை தங்களுடைய மையமாக பயன்படுத்தியுள்ளனர் என்று தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது, இது மிகவும் கவலைக்குரிய ஒரு விஷயமாகும் என்று தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.

மேலும் தென்னிந்தியாவின் நிதி மையமாக பெங்களூரு இருப்பதால் அனைத்து பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அவற்றின் செயல்பாட்டிலிருந்து நகரத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார், இரண்டு நாட்களுக்கு முன்பு மஅமித் ஷாவை சந்தித்த தேஜஸ்வி சூர்யா கர்நாடகாவில் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளை தவிற்க்க மற்றும் தணிக்க போதுமான பணியாளர்களை கொண்ட தேசிய புலனாய்வு அமைச்சகம் அவசியம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.