பீகார்:
பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாக நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் 30,000 மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபடுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதன்படி அக்டோபர் 27, நவம்பர் 3 மற்றும் 7-ஆம் தேதிகளில் 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். மேலும் கொரோனா காலத்தில் நடைபெறும் தேர்தல் என்பதால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்கும் வகையில் இரவு 7 மணி வரை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தேர்தலை அமைதியாக நடத்தும் விதமாக 30,000 மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் துணை ராணுவத்தினர், எல்லைப்பாதுகாப்பு படையினர், ரயில்வே பாதுகாப்பு படையினர் என 30,000 பேர் பீகார் சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.