கொல்கத்தா: கொரோனாவால் பாதிக்கப்பட்டால், மமதா பானர்ஜியை கட்டி பிடிப்பேன் என்ற பாஜக தேசிய செயலாளர் அனுபம் ஹஸ்ரா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாஜக தேசியச் செயலாளராக அனுபம் ஹஸ்ராவை அக்கட்சி அண்மையில் அறிவித்தது. இந்நிலையில், கூட்டம் ஒன்றில் பேசிய அவர், கொரோனாவை விட பெரிய எதிரி மமதா பானர்ஜி. அவருடன் பாஜக தொண்டர்கள் போராடி வருகின்றனர்.
ஒரு வேளை எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், நான் மமதாவை நேரில் சந்தித்து அவரை கட்டியணைப்பேன் என்று பேசினார். இந் நிலையில், முதலமைச்சர் மமதா பானர்ஜி குறித்து அவதூறு பேசிய அனுபம் ஹஸ்ரா மீது சிலிகுரி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.