சென்னை

பாஜக சமீபத்தில் அறிவித்துள்ள தேசிய நிர்வாகிகள் குழுவில் தமிழகத்தில் இருந்து ஒருவரைக் கூட சேர்க்கவில்லை.

மத்தியில் ஆளும் பாஜக நேற்று கட்சியின் தேசிய நிர்வாகிகள் பெயரை அறிவித்தது. இந்த அறிவிப்பை கட்சியின் தேசிய தலைவர் ஜேபி ந்ட்டா வெளியிட்டார்.  இந்த பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த பல மூத்த தலைவர்களுக்கு பதவி உயர்வு அளித்து இணைக்கப்படுவார்கள் என்னும் எதிர்பார்ப்பு தொண்டர்களிடையே நிலவி வ்ந்த்து.

ஆனால் அதற்கு நேர்மாறாக தமிழகத்தில் இருந்து ஒருவர் கூட இணைக்கப்படாதது பாஜகவினருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.   அவர்களுக்கு மேலும் ஏமாற்றம் அளிப்பதைப் போல் கட்ந்த 2014 ஆம் வருடம் முதல் தேசிய செயலராகப் பதவி வகித்து வந்த எச் ராஜா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  பாஜக சட்டப்படி ஒருவர 6 வருடங்களுக்கு மேல் ஒரே பதவியில் இருக்கக் கூடாது என இதற்குக் காரணம் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு தேசிய பொதுச் செயலாளராகவும் தமிழக பாஜக பொறுப்பாளராகவும் இருந்த முரளிதர ராவ் பதவியை முந்தைய தலைவர் அமித்ஷா 12 வருடங்களுக்கு மாற்றவில்லை.  அப்போதும் பல முறை தலைவர்கள் மாற்றப்பட்ட் போதிலும் முரளிதர ராவ் தொடர்ந்து பதவியில் நீடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பிராந்திய கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக பாஜக தலைவர்களால் தங்கள் கட்சியை கொண்டு வர முடியாததே தலைமையின் இந்த முடிவுக்கு காரண்ச்ம் எனக் கூறப்படுகிறது..   இவ்வாறு தமிழக தலைவர்களை ஒதுக்கி வைத்ததால் எதிர்க்கட்சிகள் பாஜகவை வட இந்தியக் கட்சி எனத் தேர்தல் நேரத்தில் குற்றம் சாட்ட வாய்ப்பு அதிகம் உள்ளது.  கடந்த 20 ஆண்டுகளில் இது போல் தமிழகம் ஒதுக்கப்படுவது இதுவே முதல் முறை எனச் சொல்லப்படுகிறது.

பிரபல அரசியல் விமர்சகரான கோலாகல சீனிவாஸ், “தமிழக தலைவர்களை ஓரம் கட்டியதன் மூலம் பாஜக தலைமைக்குத் தமிழகத்தின் மீது அக்கறை இல்லை என்பது தெளிவாகி உள்ளது. மோடி ஏற்கனவே மத்திய அமைச்சரவை அமைக்கும் போது தமிழகத்துக்கு வாய்ப்பு அளிக்கவில்லை.

நிர்மலா சீதாராமன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றாலும் அவர் தமிழகத்தில் வசிக்காததால் மாநிலத்தை சேராதவர் என ஒரு எண்ணம் உள்ளது.

 பாஜக மாநில தலைவர்களின் செயல்பாடுகள் தலைமைக்கு அதிருப்தி அளித்துள்ளது என்பது தற்போது தெளிவாகி உள்ளது.  மேலும் தமிழகத்தில் கட்சி வளர்ச்சி அடைய வழி இல்லை என்பதையும் அவர்கள் புரிந்துக் கொண்டுள்ளனர்” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.