சென்னை

ட்டமன்ற தேர்தல் குறித்து விவாதிக்க அதிமுக செயற்குழு கூட்டம் நாளை கூடுகிறது.

வரும் 2021 ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.   அனைத்துக் கட்சிகளும் இந்த தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகின்றன.  அதற்கான முன்னேற்பாட்டை அக்கட்சிகள் செய்து வருகின்றன.  அவ்வகையில் தமிழக ஆளும் கட்சியான அதிமுக தேர்தல் பணியை இப்போதே தொடங்கி உள்ளது,

இதில் முதல் கட்டமாகக் கட்சியின் செயற்குழு நாளை அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட உள்ளது.  நாளைக் காலை 9.45 மணிக்குச் செயற்குழுக் கூட்டம் தொடங்குகிறது.  இதில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் என சுமார் 250 பேர் பங்கேற்கின்றனர்.

ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைமை அலுவலகத்தில் நடந்த கட்சியில் உய்ர்மட்டக் கூட்டத்தில் சட்டசபைத் தேர்தல், மற்றும் முதல்வர் வேட்பாளர், வழிகாட்டுதல் குழு அமைப்பு குறித்து விவாடஹ்ம் நடந்தது.   இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் விவாதித்து முக்கிய தீர்மானங்களை நிறைவேற்ற உள்ளதாக கூறப்படுகிறது

கட்சி விதிகளின்படி செயற்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானத்துக்கு பொதுக் குழுவில் ஒப்புதல் பெற்ற பிறகே நடைமுறைக்கு வரும்.  எனவே செயற்ககுழு கூட்டத்தைத் தொடர்ந்து பொதுக் குழுக் கூட்டம் நடக்கும் தேதியும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு உள்ளது.  நாளைய கூட்டத்தில் தேர்தல் கூட்டணி, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட பல விவரங்களும் விவாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.