மாஸ்கோ: மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ரஷ்யா சென்று பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு, தமிழ் மற்றும் ரஷிய மொழிகளில் பாடல் பாடி அசத்தி உள்ளதாக, ஷ்ய தமிழ் சங்க நிர்வாகி நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
உலக நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஏராளமான மொழிகளிலும் பாடல்களை பாடி, புகழ் சேர்த்துள்ளார். ஆனால், அவர்கள் ரஷியாவில் எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை என்றும், அவர் ரஷிய மொழியில் பாடல் ஏதும் பாடவில்லை என சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
சில நாளிதழ்களில் அவர் நீண்ட நாள் கனவான ரஷ்யாவிற்கு செல்ல வேண்டும் என்ற கனவு நிறைவேறவில்லை என்று தகவல் வெளியாகி உளளது. இதற்கு ரஷிய தமிழ்ச்சங்க நிர்வாகி மறுப்பு தெரிவித்து உள்ளர். அதுபோல, எஸ்பிபி, ரஷியாவிற்கு சென்றதும், அங்கு பல நிகர்ச்சிகளில் கலந்துகொண்டதையும், வாழப்பாடி இராம சுகந்தன், நினைவு கூர்ந்துள்ளார்.
விஜயகுமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”ரஷ்யா வாழ் இந்தியர்களின் விருப்பத்தை ஏற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் புகழ் பெற்ற கிரம்லின் மாளிகையில் தமிழ் மற்றும் இந்திய மொழிகளில் குறிப்பாக ரஷ்ய மொழியிலும் சிறப்பாகப் பாடி எங்கள் நீண்ட நாள் கனவை நனவாக்கிய திரு எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் மரணச்செய்தி நம் அனைவரையும் ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தி உள்ளது !!
அவருடைய மறைவு உற்றார் உறவினர் மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் இசைப்பிரியர்களுக்கு ஒரு பேரிழப்பையும் இசை உலகில் ஒரு வெற்றிடத்தையும் ஏற்படுத்தி உள்ளது! அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்”
எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர் பாடிய ரஷிய பாடல் மற்றும் அவருடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் எஸ்பிபி கலந்துகொண்டு பாடிய Moscow Nights – Russian song வீடியோ…
ஊடகங்களில் வெளியான செய்தி: