சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் 10 நீதிபதிகள் நியமனத்திற்கு உச்ச நீதிமன்றம் கொலீஜியம் ஒப்புதல் அளித்து உள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 10 நீதிபதிகள் புதியதாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அதற்கான ஒப்புதலை உச்சநீதிமன்றம் கொலீஜியம் வழங்கி உள்ளது.
அதன்படி நீதிபதிகள் சந்திர சேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம், கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சாந்திகுமார் க்ருப், முரளி சங்கர் குப்புராஜூ, மஞ்சுளா ராமராஜூ நல்லய்யா, தமிழ்செல்வி ஆகிய 10 நீதிபதிகளுக்கு உச்ச நீதிமன்றம் கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 54ல் இருந்து 64 ஆக அதிகரித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel