மலையாளத்தில் எம்.பத்மகுமார் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ், ஆத்மியா ராஜன், மாளவிகா, திலேஷ் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘ஜோசப்’.
விமர்சன ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஆர்.கே.சுரேஷ் கைப்பற்றினார்.
இந்த ரீமேக்கையும் இயக்குநர் எம்.பத்மகுமாரே இயக்கியுள்ளார். ஜோஜு ஜார்ஜ் கதாபாத்திரத்தில் ஆர்.கே.சுரேஷ் நடிக்கிறார் .
இதில் பூர்ணா, மதுஷாலினி உள்ளிட்ட பலர் ஆர்.கே.சுரேஷ் உடன் நடித்துள்ளனர். பாடலாசிரியராக யுகபாரதி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார்கள்.
Here’s the first look of @bstudios_offl Dir #Bala sir presents #Vichithiran 👍
Wishing @studio9_suresh brother the best & Dir #MPadmaKumar @gvprakash @shark9pictures @yugabhaarathi @shamna_kasim #Madhushalini #VetriVelMahendran #SatishSuriya & entire team a huge success😊👍 pic.twitter.com/RftCeO1Jf7
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 23, 2020
தற்போது இந்தப் படத்துக்கு ‘விசித்திரன்’ எனப் பெயரிடப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதனை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.