தமிழ்நாட்டிலும் கவுரவக் கொலைகளா? உச்சநீதிமன்றம் அதிர்ச்சி

பள்ளிப்பாளையத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு கோகுல்ராஜ் என்ற தலித் இளைஞர் கவுரவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதான குற்றவாளி யுவராஜ், சிறையில் உள்ளார்.

யுவராஜ் ஜாமீன் கேட்டுத் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

யுவராஜ் சார்பில் வழக்கறிஞர் நாகமுத்து ஆஜரானார்.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடைபெற்றது.

‘’உத்தரபிரதேசம் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் கவுரவக் கொலைகள் நடப்பது தெரியும். தமிழ்நாட்டிலும் கவுரவக் கொலைகள் நடக்கிறதா?’ஆச்சரியமாக உள்ளதே?’’ என்று வருத்தம் தோய்ந்த குரலில் தெரிவித்த தலைமை நீதிபதி பாப்டே, அந்த ஜாமீன் மனுவைப் பரிசீலனை செய்யக்கூட மறுத்து விட்டார்.

’’குற்றவாளி என்ன செய்துள்ளார்? ஒருவர் இந்த பூமியில் வாழ்ந்த அடையாளமே தெரியாமல் செய்துள்ளார். இவர் போன்ற ஆட்களுக்கு ஏன் ஜாமீன் வழங்க வேண்டும்?’’ என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து விட்டார்.

–பா.பாரதி.