க்ரா

நேற்று மீண்டும் திறக்கப்பட்ட தாஜ்மகாலின் முதல் பார்வையாளரான லியாங் சியாசெங் ஒரு சீனர் ஆவார்.

கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த மக்கள் கூட்டம் கூடுவது தடுக்கப்பட்டது.

அவ்வகையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் பல சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன.

இவற்றில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலும் ஒன்றாகும்.

அதன்பிறகு தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தாஜ்மகால் தொடர்ந்து மூடப்பட்டிருந்தது.

இப்போது ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் நேற்று கட்டுப்பாட்டுடன் தாஜ்மகால் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டன.

தாஜ்மகாலின் முதல் பார்வையாளரான லியங் சியாசெங் சீன நாட்டை சேர்ந்தவர் ஆவார்.

அவர் இந்தியர்களுக்கு நமஸ்கார் என வணக்கம் தெரிவித்த வீடியோ வைரலாகி வருகிறது.

[youtube https://www.youtube.com/watch?v=NJTJCNfmbk0]