மும்பை: மகாராஷ்டிராவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் உள்ள படேல் காம்பவுண்டில் 3 மாடிக் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. அதிகாலை 3.30 மணிக்கு கட்டிடம் இடிந்து விழ, உறங்கிக் கொண்டிருந்த மக்கள் இடிபாடுகளில் சிக்கினர்.
தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினரும், போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதல்கட்டமாக 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. 20க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தீவிர தேடுதலுக்கு பிறகு மேலும் 2 உடல்கள் மீட்கப்பட, பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகள் முழு வீச்சில் தொடர்ந்து நடைபெறுகிறது.
[youtube-feed feed=1]