டெல்லி: ஏப்ரல். ஜூன் மாதங்களுக்கு இடையே பொதுத்துறை வங்கிகளில் 19 ஆயிரத்து 964 கோடி ரூபாய்க்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்ட கேள்வி ஒன்றில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது. அவருக்கு ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில், பாங்க் ஆப் இந்தியாவில் 47 மோசடிகளில் 5 ஆயிரத்து 124 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் நடைபெற்ற நிதி முறைகேடு விவரங்களையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது. 12 வங்கிகளில் எஸ்பிஐயானது, அதிகபட்சமாக 2050 வரை மோசடி வழக்குகளை பதிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 2 ஆயிரத்து 325 கோடியே 88 லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக ஆர்பிஐ தெரிவித்து உள்ளது.